JAFFNA VOLUNTEER


 இளநரையா? கவலைப்படாதீங்க? 

கூந்தல் கருமையாக இருப்பதுதான் இந்தியர்களுக்கு அழகு. இளமையிலேயே கூந்தல் நரைக்க ஆரம்பித்தாலோ, செம்பட்டையாக  காணப்பட்டாலே தாழ்வுமனப்பான்மையில் தவித்து போகின்றனர். இளைய தலைமுறையினர். உடம்பில் பித்தம் அதிகரித்தால் முடி நரைக்கத் தொடங்குகிறது. 

நமது தலைமுடியின் நிறம் பிறப்பிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. முடிஉறை அடியிலிருக்கும் மெலாசோசைட்ஸ் நம்முடிக்கு நிறம் அளிக்கும் செல்கள் இவை மெலானின் என்ற நிறமியை தயாரிக்கின்றன.மெலானின் அளவுப்படி தோல்,முடி நிறங்கள் அமைகின்றன. வயதாகும் போது மெலானின் உற்பத்தி குறைந்து பின் நின்றுவிடும். வயதால் முடி நரைத்தால் அதற்கு மாற்று இல்லை. நரைமுடியை மீண்டும் கறுப்பாக மாற்ற வழி இல்லை. ஆனால் இளம் வயதிலேயே தலை நரைத்தால் அதை குணப்படுத்தலாம் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். 

வைட்டமின் பற்றாக்குறை 

பரம்பரை பெற்றோர்களுக்கு,முடிக்கு நிறம் தரும் மெலானின் குறைபாடு இருந்தால்,அவர்களின் மக்களுக்கும் இளநரை தோன்றும் வாய்ப்புக்கள் அதிகம். உடல் ஆரோக்கிய பாதிப்புகளும்,உணவுச்சத்து குறைபாடுகளும் காரணமாகலாம். குறிப்பாக வைட்டமின் பி குறைபாடுகளும்,தைராய்டு பிரச்சினையும் நரை தோன்ற காரணமாகும். வைட்டமின் பி உணவுப்பொருட்களை உண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது.என்கின்றனர் மருத்துவர்கள். வைட்டமின் கே குறைபாடும் நரை வர காரணமாகலாம் இந்த வைட்டமின் கறிவேப்பிலை,நெல்லிக்காய்,சுண்டைக்காய்,பாகற்;காய்,பீர்க்கங்காய்,பீட்ரூட்,நாவல் பழம் இவற்றில் உள்ளது அவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இளநரையை தவிர்க்கலாம். 

இளநரையை தடுக்க

மருதாணி,செம்பருத்தி,கறிவேப்பிலை மூன்றையும் சம அளவில் கலந்து நன்றாக அரைத்து தலையில் தேய்த்து,சிறிது நேரம் ஊறவைத்து அலசி குளித்தால் இளநரை முடி,கறுப்பாகும். இதே போல கறிவேப்பிலை,கரிசிலாங்கண்ணி,பொன்னாங்கண்ணி கீரைகளை பயன்படுத்தலாம். மேற்சொன்ன கீரைகளுடன்,கீழா நெல்லியையும்,சேர்த்துக்கொள்ளலாம். ஒரு கைப்பிடி அளவு பச்சைத்துளசி இலையை எடுத்து ஒரு கப் தண்ணீரில் இட்டு காய்ச்சி பின்னர் இந்த நீரை எடுத்து இளம் சூட்டோடு தலையில் உரசி முடி வேர்க்கால் முதல் நுனிவரை தினசரி தடவி வந்தால் நரை நீங்கும்.முடி கறுமை நிறம் பெறும். 

 

 

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola